கனடா வன்னிச் சங்கத்தினது பலகால மக்கள் சேவையின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த மைற்கல்லாக எங்களது அமைப்பினைக் கனடா அரசாங்கம் தொண்டு நிறுவனமாக அங்கிகரித்துள்ளது. இதன்பிரகாரம் நாங்கள் தொடர்ந்து போரினால் / வறுமையினால் / மற்றும் இன்னோரன்ன காரணங்களினால் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர முடியாத பாடசாலை/பல்கலைக் கழக / இலவச கணினி நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்கான உதவியினை வழங்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.